Sunday, March 10, 2013

அங்கிகளின் பாகுபாடும் பெயரீடும்


உயிரங்கிகளைப் பாகுபடுத்தலுக்கும் பெயரிடுதலுக்கும் நியம முறைகளைப் பயன்படுத்தல்

பாகுபாடு (Classification )
உயிரங்கிளை அவற்றின் இயல்புகளின் அடிப்படையில் வகைப்படுத்தும் முறையே பாகுபாடு எனப்படும்.
இவை இருவகைப்படும்.
1. செயற்கை முறைப்பாகுபாடு (Artificial Classification)
2. இயற்கை முறைப்பாகுபாடு (Natural Classification)

செயற்கை முறைப்பாகுபாடு (Artificial Classification )


அவதானிக்கக் கூடிய ஒரு/சில,இயல்பு/இயல்புகளின் அடிப்படையில் எளிமையாகவும், இலகுவாகவும் உயிரங்கிகளைப் பாகுபடுத்தும் முறையே செயற்கை முறைப்பாகுபாடு எனப்படும்.

இயற்கை முறைப்பாகுபாடு (Natural Classification)
ஒத்த பல இயல்புகளின் அடிப்படையில் எளிமையாகவும், இலகுவாகவும் உயிரங்கிகளைப் பாகுபடுத்தும் முறையே இயற்கை முறைப்பாகுபாடு எனப்படும்.

இயற்கை முறைப்பாகுபாட்டின் சிறப்பம்சங்கள்
1. உயிரங்கிகளுக்கிடையிலான உண்மையான தொடர்புகளை
   அடிப்படையாகக் கொண்டிருக்கும்.
2. உயிர் அங்கிகளின் எல்லா இயல்புகளும் கவனத்தில் கொள்ளப்படும்.
3. ஒரே கூட்டத்தில் அடங்கும் உயிரங்கிகள் ஒத்த தன்மைகளில்
    உண்மையான தொடர்புகளைக் கொண்டிருக்கும்.
4. கூர்ப்பு நடைபெற்ற முறையை எடுத்துக் காட்டுவதாக அமையும்.

உயிரங்கிகள் கொண்டுள்ள சிறப்பியல்புகள்
1. வளர்ச்சியும் விருத்தியும்
2. அனுசேபம்
3. உறுத்துணர்ச்சி
4. இனப்பெருக்கம்
5. அசைவு
6. பாரம்பரியம்
7. சுவாசம்
8. கூர்ப்பு
9. ஒழுங்கும் ஒழுங்மைப்பும்

உயிர் அங்கிகளுக்கும் உயிரற்ற அங்கிகளுக்கும் பொதுவான இயல்புகள்
1. வளர்ச்சி   -  அகவளர்ச்சி (உயிர் அங்கிகளின் வளர்ச்சி)
                         -  புறவளர்ச்சி (பாறைகள் வளர்வடைதல்)

2. அசைவு    -  உயிர் அங்கிகள் அசைதல்
                         -  கடலலைகள் அசைதல்

உயிரங்கிகள் பிரதானமாக 3 வகையாகப் பாகுபடுத்தப்படும் அவையாவன
1. தாவரங்கள்
2. விலங்குகள்
3. நுண்ணங்கிகள்


பஞ்ச இராச்சியப்பாகுபாடு
இங்கு அங்கிகள் 5 இராச்சியங்களாகப் பாகுபாடு செய்யப்படும்.
இதுRobert.H.Whittaker இனால் 1969 இல் உருவாக்கப்பட்டது. இங்கு அங்கிகள் பின்வருமாறு பாகுபடுத்தப்படும்.
1. Kingdom :-  Monera/ Prokariyotae
2. Kingdom :-  Protista/ Prototista
3. Kingdom :-  Fungi
4. Kingdom :-  Plantae
5. Kingdom :-  Animalia

ஆட்சிநிரை ஒழுங்கு வரிசை/  பாகுபாட்டின் அலகுகள் ( Taxa of Classification)

Phylum – விலங்குகளுக்கு, Division – தாவரங்களுக்கு
பாகுபாட்டின் ஆட்சிநிரை ஒழுங்குகின் மிகப்பெரிய அலகு - இராச்சியம் (Kingdom)
பாகுபாட்டின் ஆட்சிநிரை ஒழுங்குகின் மிகச்சிறிய அலகு - இனம் (Species)
இனம் தவிர்ந்த ஏனைய அலகுகள் மனிதனால் உருவாக்கப்பட்டவை.
நிலத்தில் வசிக்கும் மிகப்பெரிய விலங்கு யானை ஆகும்.
நீரில் வசிக்கும் மிகப்பெரிய விலங்கு நீலத்திமிங்கிலம் ஆகும்.
ஆரம்பகாலப்பாகுபாட்டில் வித்துக்களை உருவாக்காத தாவரங்களின் ஓரு பிரிவாக தலோபைற்றா காணப்பட்டது. தற்போது அதில் அடக்கப்பட்ட அல்கா, பக்ற்றீரியா, பங்கசு என்பன புதிய பாகுபாட்டிலே தனித்தனி இராச்சியங் களிலே அடக்கப்பட்டுள்ளன.

தாவரப்பாகுபாட்டுக்கான பிரமாணங்கள்
தாவரங்கள் பொதுவாக ஒன்றையொன்று ஒத்துக் காணப்படுவதில்லை. அவை ஒன்றிலிருந்து ஒன்று முற்றிலும் வேறுபடுகின்றது. இவ்வாறு பல்வகைமை கொண்ட தாவரங்களுக்கான “இயற்கை முறையான பாகுபாட்டு முறையை” முதன் முதலில் உருவாக்கியவர் கரோலஸ் லீனியஸ் (1707-1778) ஆவார்.
(இவரது காலத்தில் அறியப்பட்ட தாவரங்கள் குறைவாக இருந்தமையால் இப்பாகுபாடும் ஓரளவு செயற்கைத் தன்மையுடையதாகவே காணப்பட்டது.)
1859 இல் சால்ஸ் டார்வினால் வெளியிடப்பட்ட கூர்ப்புக் கொள்கையானது அங்கிகளுக்கிடையிலான கூர்ப்புத்தொடர்புகளையும், கணவரலாற்றுத் தொடர்புகளையும் விளக்கும் இயற்கை முறைப்பாகுபாடு ஆக அமைந்தது.
பூ என்பது இனப்பெருக்கத்துக்கென சிறத்தலடைந்த தாவரப்பகுதி ஆகும்.

பூக்கும் தாவரங்கள் (Flowering Plant)
இத்தாவரங்களில் பூக்கள் மூலம் இலிங்கமுறை இனப்பெருக்கம் நிகழ்கின்றது.
இதன் மூலம் உருவாகும் வித்துக்கள் மூடியநிலையில் பழங்களினுள் காணப்படுவதனால் இவை வித்துமூடியுளிகள் (Angiousperm) எனப்படும்.
தாவர இராச்சியத்தில் விருத்தியடைந்த இவை இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்படும்.
1. ஒருவித்திலைத்தாவரம் (Monocotiladyane)
2. இருவித்திலைத்தாவரம் (Dicotiladyane)
ஒருவித்திலைத்தாவரம் (Monocotiladyane)
1. வித்தினுள் காணப்படும் முளையம் ஒரு வித்திலையைக் கொண்டது.
2. தண்டு கிளைகள் அற்றது.
3. நாருரு வேர்த்தொகுதியைக் கொண்டவை.
4. இலைகள் சமாந்தர நரம்பமைப்பைக் கொண்டவை.
5. பூக்களில் மூன்று or மூன்றின் மடங்கான எண்ணிக்கையில் அல்லிகள்
    காணப்படும்.

இருவித்திலைத்தாவரம் (Dicotiladyane)
1. வித்தினுள் காணப்படும் முளையம் இரு வித்திலைகளைக் கொண்டது.
2. தண்டு கிளை கொண்டது.
3. ஆணி வேர்த்தொகுதி கொண்டவை.
4. இலைகள் வலையுரு  நரம்பமைப்பைக் கொண்டவை.
5. பூக்களில் நான்கு/ஐந்து or அதன் மடங்கு எண்ணிக்கையான அல்லிகள்
    காணப்படும்.

புவியில் தோன்றிய முதலாவது உயிரங்கி இரசாயனப் பிறபோசனையுடைய பக்ற்ரீரியா ஆகும். இது 3.5 Billion வருடங்களுக்கு முன்னர் தோன்றியது.

பூக்காத தாவரங்கள் (Non Flowering Plant)
பூக்களை உருவாக்காத தாவரங்கள் ஆகும். இவை இனப்பெருக்கத்தின் அடிப்படையில் இரு வகைப்படும்.
1. வித்துக்களை உருவாக்கும் தாவரங்கள்
2. வித்துக்களை உருவாக்காத தாவரங்கள்

வித்துக்களை உருவாக்கும் தாவரங்கள்
வித்துக்கள் திறந்த நிலையில் காணப்படும். வித்துமூடியிலிகள் (Gymniousperm) எனப்படும்.
ஓரிலிங்கத்துக்குரியனவாகக் காணப்படும். (ஈரில்லமுடையது) ஆண், பெண் என இரு தாவரங்கள் காணப்படும்.
விருத்தியடைந்த கலன் தாவரங்களாகும்.

Eg:-  Cycas (மடுப்பனை) 

வித்துக்களை உருவாக்காத தாவரங்கள்
இவை Bryophyta, Pteridophyta, Lycophyta என இரு பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.
இவை வித்திகள் மூலம் இனப்பெருக்கும்.

வித்துக்களை உருவாக்காத விருத்தியடைந்த கலனிழையம் அற்றவை (Bryophyta)
ஈரலுருத்தாவரங்களும் மெய்ப்பாசிகளும் இதிலடங்கும்.
பிரிவிலி உடல் அமைப்புடையது.
பிரிவிலி எனப்படுவது மெய்யான தண்டு, மெய்யான இலை, மெய்யான வேர் அற்ற தாவர உடல்கள் ஆகும். சிலவற்றில் வேர்ப்போலிகள், இலை போன்ற அமைப்புக்கள் ஆகியன காணப்படும்.
கடத்துமிழையங்களான/ கலனிழையங்களான காழ், உரியம் போன்றவை காணப்படுவதில்லை.
நிழலுள்ள ஈரலிப்பான தரையில் வளரும்.
Eg:-  மார்க்கான்சியா (ஈரலுருத்தாவரம்)
போகனேற்றம் (மெய்ப்பாசி)

வித்துக்களை உருவாக்காத விருத்தியடைந்த கலனிழையம் கொண்டவை (Pteridophyta)
பன்னங்கள் இதிலடங்கும்.
உடலானது மெய்யான தண்டு, மெய்யான இலை, மெய்யான வேர் என வியத்தமடைந்து காணப்படுகின்றது.
கடத்துமிழையங்களான/ கலனிழையங்களான காழ்,உரியம் போன்றவை விருத்தியடைந்து காணப்படும்.
Eg:- நெப்ரோலோபிஸ் (பன்னத்தாவரம்)


வித்துக்களைஉருவாக்காத விருத்தியடைந்த கலனிழையம் கொண்டவை      
                                                                     (Lycophyta)
கூம்பி எனும் அமைப்பு காணப்படும்.
உடலானது மெய்யான தண்டு, மெய்யான இலை, மெய்யான வேர் என வியத்தமடைந்து காணப்படுகின்றது.
பல்லின வித்தியுண்மையைக் காண்பிக்கும். அதாவது மாவித்தி, நுண்வித்தி என்பன உருவாக்கப்படும்.
கடத்துமிழையங்களான/ கலனிழையங்களான காழ்,உரியம் போன்றவை விருத்தியடைந்து காணப்படும்.
Eg:- செலாஜினெல்லா


விலங்குப் பாகுபாட்டுக்கான பிரமாணங்கள் பூமியில் ஏறத்தாழ 30 Million விலங்கினங்கள் உள்ளன என மதிப்பிடப்பட்டாலும் அவற்றில் இதுவரை அண்ணளவாக 1 Million விலங்கினங்களே கண்டறியப்பட்டுள்ளன. 1758 இல் வெளியிடப்பட்ட “கரோலஸ் லீனியஸ்” இன் “System Nature” எனும் நூலின் 10ம் பதிப்பின் மூலம் திருத்தமான விலங்கினப்பாகுபாடு அறிமுகமாகியது. தற்காலப் பாகுபாட்டுக்கமைவாக விலங்கு இராச்சியம் (Kingdom Animalia) இரு வகையாகப் பிரிக்கப்படும்.

விலங்கு இராச்சியம் (Kingdom Animalia)
1. முள்ளந்தண்டுளிகள் (Vertibrates) 2. முள்ளந்தண்டிலிகள் (InVertibrates)

முள்ளந்தண்டுளிகள் (Vertibrates) பிரதான இயல்புகள் 1. முண்ணானைச் சூழ முள்ளந்தண்டு என்புகளால் ஆன முள்ளந்தண்டு காணப்
படும். 2. முண்ணானின் முற்பகுதி விருத்தியடைந்து மூளையாகக் காணப்படும். 3. மூளையைச் சுற்றி பாதுகாப்பிற்காக மண்டையோடு காணப்படும். 4. குதத்திற்குப்பின்புறமாக வால் காணப்படும். இவை ஐந்து பிரதான வகுப்புக்களாகப் பிரிக்கப்படும்.
1. Class :- Pisces வகுப்பு :- பிசெஸ் 2. Class :- Amphibia வகுப்பு :- அம்பிபியா 3. Class :- Reptelia வகுப்பு :- ரெப்ரீலியா 4. Class :- Aves வகுப்பு :- ஆவேஸ் 5. Class :- Mammalia வகுப்பு :- மமேலியா

வகுப்பு :- பிசெஸ்( Pisces) மீன்கள் யாவும் இவ்வகுப்பில் உள்ளடக்கப்படும். (முள்மீன்களும், கசியிழையமீன்களும்) 1. இவை நீர் வாழ்வன ஆகும். கடல்நீர் or நன்னீரில் வாழும். 2. உடலானது தலை, முண்டம், வால் எனும் பகுதிகளைக் கொண்டது. 3. அருவிக்கோட்டுருவான உடலமைப்புடையது. 4. பொதுவான சுவாச அங்கம் பூக்களாகும். 5. தோல் செதில்களைக் கொண்டது. 6. இரு அறைகளைக் கொண்ட இதயம் காணப்படும். 7. இடப்பெயர்ச்சி அங்கமாகச் செட்டைகள் காணப்படும். மற்றைய எல்லாமுள்ளந்தண்டுளிகளும் மீன்களிலிருந்தே கூர்ப்படைந்ததாக சான்றுகள் கூறுகின்றது.
Eg:- சுறா, திருக்கை, சூரை, சாளை, கடற்குதிரை

வகுப்பு :- அம்பிபியா(Amphibia) ஈரூடகவாழிகள்/ உபயவாழிகள் எனப் பொதுவாக அழைக்கப்படும். 1. வாழ்க்கை வட்டத்தின் ஆரம்பத்தை நீரிலும் நிறையுடலிப் பருவத்தை நீரிலு
ம், நிலத்திலும் கழிக்கக் கூடிய விலங்குகள் ஆகும். 2. உடலானது தலை, முண்டம், வால் எனப்பிரிக்கப்பட்டுள்ளது. 3. சூழல் வெப்பநிலைக் குருதியுடையன. 4. மெல்லிய, ஈரலிப்பான தோல் காணப்படும்.. 5. சோடியான அவயவங்கள் காணப்படும். கால் விரல்களிடையே விரலிடை 
மென்சவ்வு உள்ளது. 6. மூன்று அறைகளைக் கொண்ட இதயம் காணப்படும். 7. தோல், நுரையீரல், வாய்க்குழி என்பன மூலம் சுவாசிக்கும். 8. முட்டையிட்டு இனப்பெருக்கும். இனப்பெருக்கம் நீரில் நடைபெறும்.
Eg:- தவளை, தேரை, சலமன்டர்

வகுப்பு :- ரெப்ரீலியா (Reptelia) ஊர்ந்து செல்லும் விலங்குகளான நகருயிர்கள் இதிலடங்கும். 1. பொதுவாக தரைவாழ் விலங்குகளாகும். 2. சூழல் வெப்பநிலைக் குருதியுடையன. 3. உடலானது தலை, முண்டம், வால் எனப்பிரிக்கப்பட்டுள்ளது. 4. சோடியான அவயவங்கள் காணப்படும். (நான்கு கால்கள்) ஆனால் பாம்புகள் 
கால்களைக் கொண்டிராது. 5. உலர்ந்த, தடித்த செதில் கொண்ட தோல் காணப்படும். 6. நுரையீரல் மூலம் சுவாசிக்கும். 7. இதயம் இரு சோணையறைகளையும் முற்றாகப் பிரிக்கப்படாத இரு இதய 
அறைகளையும் கொண்டது. 8. முட்டையிட்டு இனப்பெருக்கும்.
Eg:- முதலை, பாம்பு, பச்சோந்தி

வகுப்பு :- ஆவேஸ் (Aves) பறவைகள் யாவும் இதிலடங்கும் 1. வான் வாழ்க்கைக்கு இசைவாக்கமடைந்த விலங்குகள். சில தரை, நீர் ஆகிய
வற்றில் வாழும். 2. உடல் அருவிக்கோட்டு உருவுடையது. 3. உடலானது தலை, முண்டம், வால் எனப்பிரிக்கப்பட்டுள்ளது. 4. மாறா வெப்பநிலைக் குருதியுடையன. (இளஞ்சூட்டுக் குருதி/ ஓர்சீர் வெப்பநி
லைக் குருதி) 5. சோடியான அவயவங்கள் காணப்படும். முன்சோடி சிறகுகளாகத் திரிபடைந்
து காணப்படும். 6. பொதுவாகப் பறக்கக்கூடியன. 7. பாரமற்ற என்புகள் காணப்படும். 8. உடல் இறக்கைகளால் மூடப்பட்டிருக்கும். 9. வாயானது அலகுகளாக நீட்டப்பட்டிருக்கும். பற்கள் இல்லை. 10. இதயம் நான்கு அறைகளைக் கொண்டது. 11. நுரையீரல் மூலம் சுவாசிக்கும். 12. முட்டையிட்டு அடைகாத்து இனம் பெருக்கும்.
Eg:- தாரா, கழுகு, கோழி

வகுப்பு :- மமேலியா(Mammalia) விருத்தியடைந்த முள்ளந்தண்டுளிகளாகும். முலையூட்டிகள்(பாலூட்டிகள்) எனப் பொதுவாக அழைக்கப்படும். 1. தரை, நீர் ஆகிய வாழிடங்களில் காணப்படும். 2. மாறா வெப்பநிலைக் குருதியுடையன. (இளஞ்சூட்டுக் குருதி/ ஓர்சீர் வெப்பநி
லைக் குருதி) 3. தோல் உரோமங்களால் மூடப்பட்டிருக்கும். 4. இரண்டு சோடி விருத்தியடைந்த அவயவங்கள் காணப்படும். 5. வாழும் சூழலுக்கேற்ப நடந்தோ, நீந்தியோ, பறந்தோ இடம்பெயரும். 6. பிரிமென்றகடு காணப்படும். 7. வாய்க்குழியில் பற்கள் காணப்படும். 8. நான்கு அறைகளைக் கொண்ட இதயம் காணப்படும். 9. நுரையீரல் மூலம் சுவாசிக்கும். 10. குட்டியீன்று பால் கொடுக்கும்.
Eg:- சிம்பான்சி, வெளவால், திமிங்கிலம், மனிதன்

No comments:

Post a Comment